Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு –35 விளக்கம்

மெய்யருள் வியப்பு –35 விளக்கம் 1 வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே ( பாடல் 69 ) வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்ததே – ஆன்மாவின் திருஷ்டி / பார்வை / ஒளி தன் ஜீவன் மீது பதிந்ததை இவ்வாறு வள்ளல் பாடுகின்றார் மலமும் மாயைக் குலமும் முழுதும் வெந்ததே – ஆன்ம தரிசனத்தால் மாயை மற்றும் கன்ம மலங்கள் அழிந்ததை குறிப்பிடுகின்றார் இறவாதென்றும் ஒங்கும் வடிவம் எனக்கு வந்ததே – தன் பூதமயமாகிய அசுத்த தேகம் வாதமாகி, மாறி, சாயை விழா சுத்த தேகம் தனக்கு கிட்டியது என்று தன் சாதனையை இவ்வுலகிற்கு விரித்துரைக்கின்றார் திரண்ட கருத்து : ஆன்ம தரிசனத்தால் மலங்கள் கழிந்து தான் ஆன்ம தேகமாகிய சுத்த தேகம் பெற்றதை இங்கு விளக்குகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.