Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மயனும் தவளமாடமும்
மயனும் தவளமாடமும்
இந்த மாடம் பத்திய குறிப்பு வள்ளல் பெருமான் தன் மெய்யருள் வியப்புவில் பாடியிருக்கார்
ஆனால் ஏன் மயனைக்குறிப்பிட வேண்டும்
“ மயனும் கருத மாட்டா தவள மாடத்துச்சி “ என குறிக்க வேணும் ??
மயன் ஒரு மிக சிறந்த சிற்பி
இலங்கை வேந்தன் இராவணனின் உறவு முறை
மாமனார் என நினைக்கிறேன்
இவர் தான் பாரதத்தில் கண்ணனின் பரிந்துரையில் பாண்டவர்க்கு இந்திரப்பிரஸ்தத்தில் மிக அருமையான மாளிகை அமைத்துத்தருகிறார்
அதை வேறு யாரும் நிர்மாணிக்கவிலை – இவர் தான் கட்டிக்கொடுத்தார்
அப்பேர்ப்பட்ட மிக சிறந்த கட்டிடக்கலை ஞராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத மாடம் தன் தவள மாடம் என அதனை சிறப்பித்துப்பாடுகிறார்
ஏன் ??
அது புறத்தில் கட்டுவதல்ல
அக அனுபவத்தால் சாதகனுள் உண்டாவது ஆம்
அதனால் அவனால் கூட நிர்மாணிக்க முடியாது என பாடுகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.