Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 19 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 19 விளக்கம்
தனக்கு நிகரிங்கு இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே
தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே
கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே ( பாடல் 1 )
இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே
ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே
அங்கே திகைத்து நடுங்கும் போதெல்லாம் நடுக்கம் நீக்கியே
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே ( பாடல் 2 )
தனக்கு நிகரிங்கு இல்லாதுயர்ந்த தம்பம் ஒன்றதே
இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் = இவைகள் யாவும் குறிப்பிடும் உறுப்பு ஒன்று தான் – அது சுழிமுனை நாடி ஆகும்
ஏறிப் போக போக நூலின் தரத்தில் நுணுகவே – அன்னாடியானது மேலே செல்ல செல்ல நூலைப் போல மெலிதாகி கொண்டே போகின்றதாம்
கனக்க திகைப்புற் ரங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கி தூக்கி வைத்தாய் நிலை பொருந்தவே – சுழிமுனை நாடியில் உள்ளே செல்ல , இதென்ன என பயத்தால் திகைத்து கலங்கிய போது – அக்கலக்கமெல்லாம் நீக்கி பிரமரந்திரம் என்னும் சுழிமுனையில் நிலை நிறுத்தினாய்
திரண்ட கருத்து :
சுழிமுனை நாடி நூல் இழைப் போல மெலிதாகி கொண்டே போகும் தன்மை உடையது – அதனுள் செல்ல , அதனால் வரும் பயத்தால் கலங்கி வருந்திய போது , அருள் அந்த கலக்கமெல்லாம் நீக்கி அவ்வனுபவத்தைக் கூட வைத்து , பிரமரந்திரத்தில் நிலை நிறுத்தியது என்று தன் அனுபவத்தை இங்கே உரைக்கின்றார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.