Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 18 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 18 விளக்கம் தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமமதாயிற்றே சகத்தில் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் எந்தாய் கருணை அமுதுண்டு இன்பப் பொருப்பில் ஒண்கினேன் ( பாடல் 63 ) உறவு பகை இரண்டும் எனக்கிங்க் ஒன்றதாயிற்றே ஒன்றென்று இரண்டென்று உளரும் பேதம் ஓடிப் போயிற்றே மறவு நினைவு என்றென்னை வலித்த வலிப்பு நீங்கினேன் மன்றில் பரமானந்த நடங்கண்டு இன்பம் ஓங்கினேன் ( பாடல் 64 ) முன்னமே உரைத்தபடி மெய்யருள் வியப்பு முழுமையுமே ஆன்ம அனுபவம் குறித்த பாடல்களாகும் ஆன்ம நிலை என்பது தனித்த = ஒன்று – ஏக நிலை ஆன்மா – தனிக்குமரி – எந்த தத்துவங்களுடன் சேராமல் தனித்து நிற்கும் ஆன்மா – ஒருமை நிலையில் விளங்குவது – இருமை ஆகிய இரவு – பகல் , வெற்றி – தோல்வி , நல்லது – கெட்டது என்பது கிடையவே கிடையாது அந்த ஆன்ம அனுபவங்களைத் தான் இந்த பாடல்களில் தான் அடைந்ததை விளக்குகின்றார் இருமைகளாகிய 1 தாங்கல் விடுதல் 2 உறவு பகை 3 மறப்பு நினைப்பு 4 உற்சாகம் சலிப்பு எல்லாம் ஆன்ம நிலையில் போயொழிந்தது என்று தன் அனுபவத்தை பகிர்கின்றார் ஒன்றென்று இரண்டென்று உளரும் – தெய்வம் ஒன்று இரண்டு என்ற பேதம் போயொழிந்தது திரண்ட கருத்து : ஆன்ம நிலையில் இருமைகள் என்னும் இருள் போயொழிந்து ஒருமை நிலை ஓங்கியது என்று பாடுகின்றார் மன்றில் ஆன்ம அனுபவம் – அசைவும் கண்டு பரமானந்தம் கொண்டேன் என்று பாடுகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.