Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
அருள் அனுபவம் – 2026
அருள் அனுபவம் – 2026
மார்ச் 2026
நான் அருள் பெறப்போகும் விஷன் வந்த வண்ணம் இருந்தது – 15 நாட்களுக்கு
நான் அருள் பத்திய சிந்தையுடனே இருந்தேன் – வேறு எண்ணமே இல்லை
இயேசு கிறிஸ்து ? ?? , தாலி கொடுக்க நான் ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டுவது மாதிரியாக
அது மாதிரி கல்யாணம் தொடர்பாக விஷன் வந்தபடி இருந்தது
நான் புரிந்து கொண்டுவிட்டேன்
பின்னர் திருமணம் நடந்தே நட ந்தது – அருளுடன் பந்தம் சம்பந்தம் தொடர்பு ஏற்பட்டது
அதுக்கு முதலில் வினாயகர்க்கும் சிவன் பார்வதிக்கும் பாதப்பூஜை செய்கிறேன் – பின்னர் திருமணம் நடந்தது
எனக்கு ஒரே வியப்பு தான் – உலக வாழ்க்கையிலும் இப்படித்தானே நடக்கும் அதே மாதிரி தெய்வத்திருமணமும் நடக்குதே என வியப்பு
எனக்கு இதுக்கு தகுதி இல்லை என்ற எண்ணம் தான்
இதெல்லாம் இந்த பிறவியில் சாத்தியமிலை
ஆனால் எப்படி இது நடந்தது என்று எனக்கு புரியல
இதன் பயனாக – உடல் பிணி நோய் தணியும் சரியாகும் என்று விஷன் கூறி இருக்கு
அது உண்மையாகவும் இருக்கு
வருங்காலத்தில் அருள் அனுபவம் அதிகமாகுமாம்
இன்னும் அற்புதம் நடக்குமாம்
பார்க்கணும்
இது நடந்த பின் வந்த விஷன் :
சென்ற வாரம் ஒரு நாள் , வேதாத்திரி என் வீட்டுக்கு வருகிறார்
அவர் முகம் ஒரு பக்கம் கறுத்து கொப்பளம் மாதிரியாக கோரமாக இருக்கு
அவர் என் காலில் விழுந்து “ என்னை மன்னித்துவிடு “ என்றார்
விஷன் முடிந்துவிட்டது
அவர் பெறாததை நான் பெற்றதை அங்கீகரிக்கும் விதமாக இந்த விஷன் அமைந்திருக்கு
ஆர் நம்பறது
பூனைக்கு மணி கட்டுவது ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.