Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 17 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 17 விளக்கம் அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே இருளும் நிறத்து கூற்றைத் துரத்தி அருள் சிற்ஜோதியே என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்றது ஆதியே ( பாடல் 61 ) அருளும் பொருளும் பெற்றேன் அடியனாகி நானுமே – திருவடிப் பற்றி பயிற்சி சாதனம் பயின்று அதில் வளர்ச்சி கண்டு தான் அடியவனாகி , அதனால் அருளும் பொருளும் பெற்றேன் அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே – மாயை மற்றும் வினைகள் என்ற மலங்கள் ஆன்ம நிலையில் செயல்படாது – தான் ஆன்ம நிலைக்கு வளர்ச்சி அடைந்துவிட்டபடியால் அதன் மேல் எந்தவொரு பயமும் இல்லை இருளும் நிறத்து கூற்றைத் துரத்தி அருள் சிற்ஜோதியே என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்றது ஆதியே – என்பது அருள்ஜோதி அவரது அகத்தும் புறத்தும் எப்போதும் துணை காக்க நின்றதால் , அது கூற்றென்னும் மரணத்தை துரத்தி அடித்துவிட்டது திரண்ட கருத்து : ஆன்ம நிலையில் மாயை கன்ம மலங்கள் செயல்படாததால் – அன்னிலைக்கு ஓங்கி வளர்ந்து விட்டபடியால் அதன்மேல் எள்ளளவு பயம் கூட இல்லை என்று பெருமைப் படுகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.