Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 16 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 16 விளக்கம் காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தினேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் சேமப் பொதுவில் நடம் கண்டெனது சிறுமை நீங்கினேன் சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் ( பாடல் 62 ) காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தினேன் கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் – என்பது யாவும் ஒரு ஜீவன் கண் உள்ள எல்லா இருள் குணங்களை தான் கடந்து போய் விட்டதாக எடுத்துரைக்கின்றார் – இதனைத்தான் கீழ் பச்சைத் திரை விலகுதல் என்று பேருபதேசத்தில் விளக்கம் அளித்துள்ளார் வள்ளல் பெருமான் சேமப் பொதுவில் நடம் கண்டெனது சிறுமை நீங்கினேன் – ஆன்மாவின் அசைவை கண்டு ஜீவன் என்னும் சிறுமை நீங்கப் பெற்றேன் – ஆன்ம நிலை அடைந்தேன் சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – பின்னும் மேல் சென்று திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து கண்டு தன் நிலையில் ஓங்கி வளர்ந்தேன் என்று தன் ஓயாத வளர்ச்சியை பாடுகின்றார் திரண்ட கருத்து : தான் செய்த தவத்தால் , கீழ்ப் பச்சைத் திரை விலகி தான் சுத்த ஜீவன் – புனிதன் – புருஷோத்தமன் ஆனது பற்றியும் , ஆன்ம தரிசனம் ஆனது குறித்தும் , பின்னும் மேல் சென்று திருச்சிற்றம்பலத்தில் நுழைந்ததுப் பற்றியும் இங்கு தன் அனுபவத்தை விரித்துரைக்கின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.