மெய்யருள் வியப்பு 14 விளக்கம்
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே
தகும் ஐந்தொழிலும் வேண்டுன் தோறும் தருதல் வல்லையே
வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லையே
மிகவும் நான் செய்த குற்றம் குறித்து விடுவாய் அல்லையே ( பாடல் 8 )
தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே –
இங்கு தனி என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த பதமாகும் –
அவரது ஆன்மா அவரது ஜீவன் ( உணர்வு ) மேல் வைத்த பரிவு அக்கறை கருணை தாய்க்கும் கூட இல்லை
தகும் ஐந்தொழிலும் வேண்டுன் தோறும் தருதல் வல்லையே – ஐந்தொழிலும் இயற்றும் வல்லமை தகுந்த நேரத்திற்கு தகுதி கருதி ஆன்மா கொடுக்கும்
வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லையே = தன் உயிரை – ஆன்மாவை மலங்களை எரித்து – திரைகளை நீக்கி எனக்கு காட்டினாய்
மிகவும் நான் செய்த குற்றம் குறித்து விடுவாய் அல்லையே – தான் செய்த குற்றங்களை எல்லாம் தன் ஆன்மா பொறுத்துக் கொண்டது
திரண்ட கருத்து :
வள்ளல் பெருமான் தன் ஆன்மா தன் மீது காட்டிய தயவு , கருணை பொழிவு எல்லாம் எல்லை இல்லாதது என்றும் , அது தனக்கு செய்த உதவிகள் – ஐந்தொழில் மற்றும் ஆன்ம தரிசனத்திற்கு செய்த சகாயங்கள் குறித்து இப்பாடலில் பாடுகிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.