Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
ஞானியர் பெருமை
ஞானியர் பெருமை
தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான் நாம் பிறக்கையில்
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
இது பிரபலமான சினிமா பாடல் வரிகள்
ஆனால் இது தவறாகிப்போம்
இது எல்லவர்க்கும் பொருந்தாது
ஞானியர்க்கும் - ஆன்ம சாதகர்க்கும் சேர்த்து
ஜீவர்கள் பரிணாம வளர்ச்சி – பக்ஷம்
அருட்பா உரை நடையில் :
சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – 5
தவத்தால் மேலேறி பக்குவத்துக்கு வரும் சமயம்
வாயால் உரைத்தது நடக்கும் அளவுக்கு உயரணும் – சம்பு பக்ஷம்
கர்ணன் பிறப்பு மாதிரி
இதில் நம் உடல் அமைப்பு ஆயுள் கல்வி அறிவு எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள்ள முடியும்
பின்னும் தவத்தால் மேலேறி , அருள் வல்லபத்தால் , ஜட பொருளையும் அறிவுப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றிருத்தல்
இது விபு பக்ஷம்
ஆகையால் உலக விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்கணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.