Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
திருமந்திரமும் - திருவருட்பாவும் “
திருமந்திரமும் - திருவருட்பாவும் “
8ம் திருமந்திரம்
ஆறாறில் ஐயைந்தகல நனாநனா
வாறா மவைவிட வாகு நனாக்கனா
வேறான ஐந்தும் விட நனாவினில்
ஈறாஞ் சுழுத்தி யிதின்மாயை தானே
அதாவது
36 தத்துவத்தில் 25 தத்துவங்கள் – ஆன்ம தத்துவம் 24 + 1 புருஷ தத்துவம் கழல அது நனவில் நனா எனும் அவத்தை
மேலும் 6 வித்தியா தத்துவங்கள் – கலை காலம் என இதரவைகள் கழல அப்போது வரும் அவத்தை நனவில் கனவு ஆகும்
கடை ஆம் சிவதத்துவம் 5ம் கழல – அப்போது நனவில் உறக்கம் ஆம் எங்கிறார் மூலர்
இதை தான் வள்ளல் பெருமான் “தத்துவ நிக்கிரகம் “ என்ற தலைப்பில் உரை செய்துள்ளார்
நம் சன்மார்க்க அன்பர்கள் திருமந்திரத்தை தள்ளி வைத்துவிடுவார் – அது சமய நூலாம்
நல்ல வேடிக்கை
அதனால் இன்னமும் இருளில் இருக்கார்
ஜீவகாருண்ணியம் அன்னதானம் தான் வழி எங்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.