Thursday, April 16, 2026

மனமும் காலமும்

மனமும் காலமும் மனம் இருக்கின்ற இடத்தில் தான் காலம் உளது மனம் செயல்பட செயல்பட , சுவாச கதியால் காலம் செயல்படுது இலங்கை அரசன் இராவணன் 9 கிரகங்களை தன் காலால் மிதித்துத்தான் தன் சிம்மாசனம் மீது அமர்வானாம் மனம் – இராவணன் எனில் ?? அது இருப்பது உச்சியில் ஆகையால் – இந்த காலத்தை அளக்கும் கருவிகளான 9 கிரகங்களும் உச்சிக்குக்கீழ் தான் என பொருளாகுது ஆக , நாம் உச்சிக்கு மேலேறினால் , காலத்தை கடந்துவிடுவோம் என்பது உண்மை அதனால் இதிகாசப் புராணத்தை பரிகாசிக்காமல் – அது சொலும் கருத்தை தத்துவ விளக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்தி – ஞானத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் இது ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் ஆகும் ஆனால் நம் சன்மார்க்க மக்கள் இதெலாம் ஆய்வு செய்யாமல் – இதெல்லாம் ஐயா தத்துவ விளக்கம் என கூறியுள்ளார் – அதனால் நாம் இதை எலாம் படிக்கவே கூடாது என ஒதுக்கி வைத்து மோசம் போகிறார் முதல் 5 திருமுறைக்கே இந்த கதி எனில் – மத்ததுக்கு சொல்லவும் வேணுமோ ? பின் எங்கே சன்மார்க்கம் உருப்படுவது ?? தவம் விளங்குவது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.