Wednesday, April 15, 2026

பழமொழியும் - உண்மை அர்த்தமும்

பழமொழியும் - உண்மை அர்த்தமும் 1 யானைக்கு ஒரு காலம் வந்தா – பூனைக்கு ஒரு காலம் வரும் உலக வழக்கு : பெரிய மனிதர்க்கு ஒரு நல்ல நேரம் வந்தால் – சிறு மனிதர் ஏழைக்கும் காலம் வரும் உண்மை பொருள் : யானை அல்ல ஆ + நெய் அதாவது பசு நெய் சாப்பிட்டு உடல் பெருத்துப்போகும் காலம் வந்தால் , பூனை அல்ல பூ + நெய் = தேன் தேன் உணடு உடல் இளைக்கும் காலமும் வரும் என்ற பொருளில் இந்த மொழி வந்தது 2 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் – தன் பிள்ளை தானே வளரும் உலக வழக்கு : அதாவது அக்கம்பக்கத்துவீட்டு பிள்ளை உணவு ஊட்டி வளர்த்தால் , நம்ம பிள்ளை நல்லா வளரும் உண்மை பொருள் : ஊரார் பிள்ளை என்பது ஒரு தாய்க்கு – தன் மருமகள் மருமகள் நல்லா உணவு உண்டு வளர்ந்தால் – அவன் பிள்ளை ஆகிய மகன் நல்லா உணவுண்டு வளர்வான் அதே போல் – ஒரு கணவனுக்கு தன் மனைவி ஊரார் பிள்ளை ஆவாள் அவள் நன்கு உணவுண்டு வளர்ந்தால் – அவன் பிள்ளைகள் நன் கு வளர்வர் என்ற பொருளில் இந்த மொழி வந்தது எப்போதும் உலகத்துக்கும் உண்மைக்கும் ஏழாம் பொருத்தம் தானே?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.