Monday, April 13, 2026

என் வாசி அனுபவம்

என் வாசி அனுபவம் உண்மை சம்பவம் வாசி – இது தான் எல்லாருடைய யோக விருப்பம் உள்ளோர் தாரக மந்திரம் உலகில் அதிகம் பயிலப்படும் யோகம் இது தான் யாரைக்கேட்டாலும் வாசி – சித்த வித்யார்த்தி என்பார் இதை வட கரை ஆஸ்ரமம் – பாட்டு சித்தர் என அனேகர் கற்றுத்தருகிறார் ஊத கற்றுத்தருகிறார் முதலில் – பின்னர் அனுபவம் வரும் என சொல்கிறார் தினமும் செய்ய சொல்வார் வெறும் கனல் ஒரு பொருளை உருக்காது கருக வைக்கும் அதனால் காற்று வைத்து ஊதினால் அது உருக்கும் தவத்தினால் , காற்றும் கனலும் சேர வேணும் அப்போ அது சிவ யோகம் ஆயிற்று ஆனால் உலகத்துக்கு இதை தெரியவிலை – ஏற்பதுமிலை கொல்லன் உலை வைத்து ஊதுவது தங்கத்தை உருக்குவது போல் . ஆம் உடலை எலும்பை உருக்கும் அது உடலின் எலும்பை உருக்கி அதன் சத்து உடலுக்கு அளிக்கும் உடல் வலுவாகும் – நரம்புக்கு சத்து ஏறும் - நரம்புத் தளர்ச்சி நீங்கும் ( நம் அன்பர் வேறு சிந்தனைக்கு சென்றுவிடுவார்கள் ) உடல் தக்கை ஆகும் இதெலாம் என் அனுபவம் என்ன வியப்பெனில் ? நான் வடகரை /பாட்டு சித்தரிடம் சென்று பயிலவிலை நான் கண் – திருவடி வைத்து இத்தனை அனுபவத்துக்கும் வந்து விட்டேன் கண் வைத்து ஊதுகிறேனே அல்லாது – மயில் /குயில் கூத்து என சத்தம் செய்து வாசி அனுபவம் பெறவிலை இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார் சன்மார்க்க அன்பர்கள் , இது தான் சாக்காகப் போச்சி / மிக நல்லதாப் போச்சி – ஓ இவன் செய்வது வாசி பயிற்சியா ?? இது சன்மார்க்கமே இல்லை சன்மார்க்கத்தில் யோகமே இல்லை இவன் ஜீவகாருண்ணியத்துக்கு எதிரியாச்சே – சன்மார்க்கத் துரோகியாச்சே – எல்லா சங்கங்களின் அன்னதானத்தை விமர்சனம் செய்பவன் ஆயிற்றே என்பார் பின் ஏன் ?? வள்ளல் பெருமான் “ வாசியாக வருவாண்டி – வாசி நடத்தித் தருவாண்டி “ என பாடி வைத்தார் எனக் கேட்டால் , பதில் அளிக்காமல் ஓடிவிடுவார் நம் மக்கள் அவ்வளவு தான் ஒன்றும் செய்ய முடியாது – சொல்லவும் முடியாது காலம் வரும் போது – அவரவர் தெரிந்து தெளிந்து கொள்வார் வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.