Monday, April 13, 2026

அபெஜோதியும் - ஐந்து தொழில் தலைவரும்

அபெஜோதியும் - ஐந்து தொழில் தலைவரும் அருட்பா உரை நடை - சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் இது வரையில் கரும சித்தர் காலம் - அதனால் சமயம் மதம் பரவியிருந்தன இப்போது வரப்போவது ஞான சித்தர் காலம் . இனி ஜாதி மதம் சமயம் முதலான ஆச்சாரம் போய் , சமரச சன்மார்க்க சத்திய ஞான ஆச்சாரம் ஒன்றே விளங்கும் சமய மதத்தில் கூறி இருக்கும் கர்த்தர்கள் மூர்த்திகள் ஈஸ்வரன் பிரமன் சிவன் முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதுக்கு மேல் இராது சமய மதத்தில் கூறி இருக்கும் கர்த்தர்கள் மூர்த்திகள் சித்திகள் சர்வ சித்திகளுடைய கடவுளரின் லேசங்கள் அந்த சர்வ சித்தியுடை கடவுளுக்கு ஒப்பாகார்கள் கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கார் வள்ளல் பெருமான் ஏன் இவ்வாறு கூறி சென்றார் ?? இது படித்தால் அனேகர்க்கு கோபம் வரும் உண்மை விளங்கிக்கொள்ளாததால் தான் கோபம் கொள்கிறார் கீழ் காணும் படத்தை பார்த்து புரிந்து கொண்டால் , தெள்ளத் தெளிவாகிவிடும் 5 தொழில் செய் தலைவர் அனைவரும் 36 தத்துவத்துக்குள் அடங்கி விடுவதாலும் , அதை எல்லாம் தாண்டி சுத்த சிவம் அபெஜோதி நடராஜர் விளங்குவதால் இவ்வாறு உரை செய்திருக்கார் வள்ளலார் மேலும் இது புரிந்து கொள்ளுதல் மிக கடினம் தான் – வித்தை / விளக்கம் அறிந்த குரு விளக்கினால் அல்லாது புரிந்து கொள்தல் கடினம் சமய மதம் தாண்டிய சிந்தை இருந்தால் தான் புரிந்து கொள முடியும்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.