Sunday, April 5, 2026

சிரிப்பு “ சிவன் சொத்து குல நாசம் “

சிரிப்பு செந்தில் : அண்ணே அண்ணே – உங்களுக்கு ராஜ யோகம் அடிச்சிடிச்சி க மணி : அப்படி என்ன ஆய்டிச்சி ?? செந்தில் : எங்க தலைவர் - அண்ணன் – என் உயிர் – உங்களை கூட்டி வரச்சொன்னார் – உங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு மழை கொடுக்கணும்னு ஆசைப்பட்றார் அண்ணே க மணி : எதுக்கு ?? செந்தில் : நீங்க எழுதின “ சிவன் சொத்து குல நாசம் “ பதிவை அவர் கிட்ட காட்டினேன் – படிச்சி காமிச்சேன் ( படிக்கத் தெரியாது ) அவர் ரொம்ப சந்தோசப்பட்டு – உங்களை பார்க்கணும்னு சொன்னாரு க மணி : ஏன் பார்க்கணும் ?? செந்தில் : அவர் சிலை கடத்தல் தான் மெயின் தொழில் - அதனால் தன் குலம் நாசமாகிப்போயிடுமோ ஒரு பக்கம் பயம் – ஒரு பக்கம் பகுத்தறிவு தைரியம் கொடுக்குது உங்க பதிவில , அது அந்தச் சொத்தை குறிக்கல , அது வேறனு கேள்விப்பட்ட உடனே , அவர்க்கு ரொம்ப சந்தோஷம் அண்ணே அவர் நெஞ்சில பாலை வார்த்திட்டீங்கண்ணே அவர் குலம் தப்பிச்சதுனு ஒரே சந்தோஷம் அண்ணே அவர் ரொம்ப நிம்மதியா இருக்கார் - அதுக்குத்தான் பாராட்டு விழா க மணி : என்ன பரிசு ?? செந்தில் : ஒரு பண்ணைத்தோட்டம் – கார் சாதாரண கார் தான் Audi R6 தான் – சொகுசு கார்னு நினைச்சிக்காதீங்க மணி : என்னது Audi R6 சாதாரண காரா ?? இது அடுக்குமா ?? செந்தில் : இப்போ அது மாதிரி ஆயிடுச்சி அண்ணே – காலம் மாறிடுச்சி இந்த மாதிரி எல்லா கட்சிக்காரங்களும் பாராட்டுவாங்க பாருங்க அண்ணே க மணி : வேண்டாம் – “ கூடா நட்பு கேடாய் முடியும் “ வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.