Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
காரை சித்தர் – சித்துவிளையாட்டு
காரை சித்தர் – சித்துவிளையாட்டு
உண்மை சம்பவம்
இவர் பேரன் என்னை சென்னை வீட்டில் இம்மாதம் சந்தித்த போது கூறியது
அப்போது சித்தர் ( இயற்பெயர் – ராகவன் ) தன் பள்ளியிலேயே பல சித்துக்களை புரிந்துளதாக அவர் தெரிவித்தார்
ஒரு சமயம் – அவர் ஆசிரியர் – கிறித்தவர் – தன் இடத்துக்கு
திரும்பிய போது , எல்லா சக ஆசிரியரும் அவரைப்பார்த்து சிரித்தார்களாம்
ஏன் ?? என கேட்க , சென்று கண்ணாடி பார்க்கவும் என்றனராம்
அவர் சென்று பார்க்க – திகைத்துவிட்டாராம்
அவர் நெற்றியில் நாமம் இருந்ததாம்
எவ்வளவோ அழிக்க முயன்றும் முடியவிலையாம்
அவர் சென்று தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க , அவரோ ராகவனிடம் ஏதாவது பிரஸ்னையா ?? என கேட்க ,
ஆமாம் அவனை இன்று அடித்தேன்
அவர் : அவனிடம் வம்பு பிரச்னை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றாராம்
இந்த சேதி எனக்கு புதிது
நான் பல முறை குடந்தையில் அவர் சமாதி சென்ற போதிலும் இதை கேள்விப்பட்டதிலை
ஊர் மக்கள் கூறுவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.