Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 23, 2026
கதம்பக் கட்டுரை - பெருமைகள்
கதம்பக் கட்டுரை - பெருமைகள்
1 கண் மணி பெருமை
கதை :
குகையில் இருக்கும் கிளி கொன்றால்
ராட்சஷன் மாண்டு போவான்
அனுபவம் :
குகையில் கண் ஏற்றி
அசைவை - நுண்ணிய – மிக மிக நுண்ணிய அசைவை ஒழித்தால்
மனம் மாண்டு போம்
அக அனுபவம் தான் புறக்கதை
2 உளவின் பெருமை
உழவு இருந்தால் தான்
நமக்கு உணவு – ஜீவனம் வாழ்க்கை எல்லாம்
இது புறம்
அதே போல் தான்
உளவு இருந்தால் தான்
சாதனத்தில் தவத்தில் வளர்ச்சி
முத்தி சித்தி முத்தேக சித்தி மரணமிலாப்பெரு வாழ்வு எலாம்
நம் மக்கள் ரெண்டாவதை காற்றில் பறக்க விட்டார்
3 விழிப்புணர்வு பெருமை
சாதனம் தவத்தில் அடையும்
உயர் அனுபவங்கள் தக்க வைக்க
விழிப்புணர்வு மிக மிக அவசியம்
இதிருந்தால் தான்
அந்த உயர் அனுபவ நிலையிலேயே நிலைத்து நிற்க முடியும்
இலையெனில் சறுக்கி விடுவோம்
4 நெற்றிக்கண் பெருமை
புருவத்தின் கீழ் இருக்கும்
விழிகள் மூடும் திறக்கும்
ஆனால்
நெற்றியில் விளங்கும் தீப விழி
மூடவே மூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.