Thursday, April 23, 2026

கதம்பக் கட்டுரை – பெருமை

கதம்பக் கட்டுரை – பெருமை 1 கண்மணி பெருமை காற்றின் இருப்பு பொருளின் அசைவால் அறிந்து கொள்வது போல் மனதின் இருப்பை கண்களின் அசைவால் அறிந்து கொள்ளமுடியும் கண் அசைவு ஒழிந்தால் மனதின் அசைவு ஒழியும் மனமும் ஒழியும் 2 அருள் பெருமை குரு : தான் நின்ற வண்ணம் தம் மாணாக்கரை அறிவில் சாதனையில் அனுபவத்தில் உயர்த்தி நிற்க வைப்பவர் இதையே தான் அருளும் பிரபஞ்சமும் செய்யுது தான் எண்ணியதை – கற்றுக்கொடுக்க எண்ணிய பாடத்தை அது நமக்கு புரிய வைக்குது அதுக்கு தேவையானவற்றை எலாம் செயுது புரிய வைத்த பின் சாதனத்தில் மேன்மேலும் வளர்க்குது அனுபவம் கூட வைக்குது இதுக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம் இது அருள் பெருமை ஆம் 3 கண்மணி பெருமை ஒரு பெண் காதல் அம்பு தொடுத்தால் காதலன் இதயம் துளைத்து இரத்தம் கசியுது வழியுது ஆன்ம சாதகன் பார்வை அம்பு இதயத்துக்கு தொடுத்தால் அது பிளந்து அமுத கலசம் உடைந்து அமுதம் வழியுது இது எப்படி இருக்கு ? 4 திருவடி பெருமை உலகம் இரும்புக்கரம் கொண்டு கலவரம் போராட்டத்தை அடக்குது ஆனால் ஆன்ம சாதகனோ மென் மலர்ப்பாதம் கொண்டு கலவரம் – போராட்டம் செயும் மனதை அடக்கிவிடுகிறான் இது என் அனுபவம் கூட எப்படி இருக்கு ?? 5 கண்மணி - திருவடி பெருமை சிவத்தின் சிற்றம்பல நடம் நின்றால் உலக இயக்கம் நின்றுவிடும் கண்மணிகள் நடனம் ஆட்டம் நின்றால் மனதின் இயக்கம் ஆட்டம் நின்றுடும் இது கண்மணி பெருமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.