Tuesday, April 14, 2026

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் வடலூர் – சொற்பொழிவு 2 1 அவர் : சுத்த சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல – கருணை நெறி - தயவு மார்க்கம் அதனால் சாதனம் தவம் தேவையிலை தயா ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் போதும் எல்லாம் சித்தியே நெற்றிக்கண் திறந்து கொளும் நான் : சரி – நீங்கள் எல்லவரும் தயவில் நிற்கிறீர்கள் – அதான், ஒரு தொலைக்காட்சியில் கூட , எல்லா அன்பர் பேர் முன்பு தயவு என பட்டம் போல் வைத்துக்கொள்கிறார் அப்படி எனில் – வள்ளல் பெருமான் – இந்த நிலை நிற்போர் கண் பார்த்தால் போதும் – பிணம் உயிர் பெற்றுவிடும் என கூறி இருக்காரே – நீங்கள் எத்தனை பிணத்துக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள் ?? அவர் : ஆ ஆ – நல்ல கேள்வி – சரியான கேள்வி – பதில் சொல்கிறேன் நான் : இப்படித் தான் மதுரையில் ஒரு சபை – கருணை கருணை என கிளி போல் கூறியதையே கூறி வருது முதல் 5 திருமுறை ஒதுக்கிவிட வேணும் – 6ம் திருமுறை தான் ஓதணும் – நல்ல வேடிக்கை சிரிப்பு 2 எனக்கு அடிக்கடி குறுந்தகவல் வரும் : சன்மார்க்க தெய்வம் = இது காறும் உலகம் கண்டு வந்த சமய மத தெய்வம் அல்ல – அது தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்சோதியர் நான் கேட்டது : இன்னும் எத்தனை நாளுக்கு இதை கூறி கூறி உலகை ஏமாத்திக்கொண்டு இருக்கப் போகிறாரோ ?? தெரியவிலை வள்ளல் பெருமான் – ஆறாம் திருமுறை – ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகளில் பாடிய சிவகாமி அம்மையை கண்டேன் – அவள் அருளால் நடராஜரைக் கண்டேன் உள்ளே சென்றேன் - நான் பெற்றது யார் அறிவார் - சாமி அறியும் இதில் நடராஜர் – சிவகாமி எந்த சமய தெய்வம் ? அது சன்மார்க்க தெய்வமா ?? இலையா ?? அவர் பதில் அளிக்கவிலை அளிக்க முடியாது 6ம் திருமுறையில் எத்தனை இடத்தில் – நடராஜர் பேர் பாடியிருக்கார் ?? அவர் யார் ?? எந்த சமயக் கடவுள் ?? ஓரு பழுத்த சன்மார்க்க அன்பர் – 85 வயது – அவர் , வள்ளல் பெருமான் – 6ம் திருமுறையில் சுமார் நூற்றுக்கணக்கான இடத்தில் நடராஜர் என குறிப்பிட்டுள்ளார் என தன் நூலில் வெளியிட்டார் – அவரை மிரட்டி இருக்கார் நம் மக்கள் எப்படி இருக்கு கதை ?? உண்மை அறிய விடமாட்டார் போல குண்டு சட்டியிலே குதிரை ஓட்ட வேணும் - அன்னதானம் – ஜீவகாருண்ணியம் – சோறு போடுதல் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.