Tuesday, April 14, 2026

சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை 1 வாலைசாமி ஞான கும்மி -54 முச்சுடர் வட்டமே சக்கரமாம் அது மூக்கு நுனியிற் சுழிமுனையாம் அச்சுடர் வட்டத்து இருந்தவனே குரு ஆனந்த நந்தியாம் வாலைப்பெண்ணே! பொருள் : சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேரும் உச்சி தான் சுழிமுனை ஆகும் அங்கு தான் நந்தி ஆகிய குரு இருக்கார் 2 சுழிமுனையே திறந்தக்கால் மனம் ஒடுங்கும் . -போகர் 7000: 22 சுழிமுனை உச்சி திறந்தால் ஒழிய மனம் அடங்கவே அடங்காது அங்கு மனம் ஒடுக்கம் அடையும் எங்கிறார் சித்தர் 3 ஆதியாம் மத்தி அமர்ந்திடும் சமாதி –அகத்தியர் பொருள் : : சமாதி எனில் – ஆதியாகிய நடு ஆற்றும் - ஒருமை ஆற்றும் ஆன்மாவுடன் இருத்தல் – நிலைத்து நிற்றல் ஆம் ஆதியுடன் சமம் ஆதல் சமாதி ஆதி = ஆன்மா அது சுழிமுனையே ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.