Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
கண் தவ அனுபவங்கள்
கண் தவ அனுபவங்கள்
நான் தவம் செயும் போது – ஐயோ எந்த அனுபவமும் வரவிலையே எனக் கவலைப்படுவதிலை
இன்று வரவிலை எனில் நாளை வரும் என விட்டுவிடுவேன்
ஆனால் நான் சரியான பாதையில் தான் என் சாதனம் செல்கிறது என்பதில் நான் மிக்க உறுதியுடன் உள்ளேன்
அதனால் அந்த கவலையிலை
ஆனால் அனுபவங்கள் வந்த வண்ணம் தான் இருக்கும்
உரை நடையில் கூறி இருப்பவைகள் , அருட்பா பாடலில் இருக்கும் வரிகள் நான் அனுபவமாக கண்டிருக்கேன்
இது எந்த அனுபவம் – எந்த நிலை என நான் கண்டுபிடித்துவிடுவேன்
பரம் எனக்கு புரியவைத்துவிடும்
புரியவிலை எனில் – மற்றவரை வைத்து அந்த காரியத்தை கச்சிதமாக முடித்துவிடும்
இப்படி பல பல அனுபவம் நடந்திருக்கு
இதுக்கு அடுத்து என்ன அனுபவம் – என்ன படி மேலேற வேணும் என்றும் முன் கூட்டியே அறிவித்து – பின் சில நாள் கழித்து அது கூடிவிடும்
நான் கண்ட மிக மிக முக்கியமான அனுபவம் எதெனில் ??
என் குண மாற்றம்
கண் தவத்தால் – துவேஷம் குரோதம் எலாம் குறைந்து வருகிறது
சமய மதத்தில் சமரசம் வந்துவிட்டது
உலக மக்களிடத்திலும் ஒருமை வருகிறது - இது பச்சைத்திரை சம்பந்தப்பட்டது - விந்துவில் நிகழும் மாற்றம் – பெரிய மாற்றம்
பட்டி மண்டபம் அருகே வந்துவிட்டேன் – ஏறி அமர்ந்து விடுவேன்
புருவப்பூட்டைத்திறந்து விடுவேன்
கண் தவம் வேலை செய்கிறது – திருவடி வேலை செயுது
இது ஒன்று போதும் – கண் திருவடி தவம் மெய் உண்மை என நிரூபிக்க
சன்மார்க்கம் என்பது கண் வைத்து காட்டும் வித்தை அல்ல என கூறும் சோறு போடும் கூட்டத்துக்கு இந்த பதிவு தான் பதிலடி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.