Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அகவல்
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி ( 7 – 8 )
பொருள் :
இதுக்கு விளக்கம் அவசியமேயிலை
எனினும் வள்ளல் பிரான் தன் உரை நடையில் கூறிச்சென்றுள்ள சில விளக்கம் அளிக்க வேண்டி – இந்த அகவல் பதிவு
“ பிண்டானுபவ இலக்கணம் “ பக்கம் 266 -267
நாதஸ்தானம் தொட்டு – துவாதசாந்தம் வரையில் அனுபவ வெளியாகிய ஆகாச பேதமாக இருக்கும்
அதற்கு மேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில் விளங்கும்
மேலும் பிரமத்தானம் தொடங்கி சுத்த சிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம் , இருதயம் வரையில் வாயு நாடி வண்ணமாயும் , அதுக்கு மேல் அக்னி வண்ணமாயும் இருக்கும்
இது அடியில் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்கு புலப்படாமல் அணுவுக்கணுவாய் – ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் – ஆன்மக்காட்சியில் அருகி தோன்றுவதாய் – இரண்டற நிற்கும்
இதற்கு சிவாகார பூரணஸ்தம்பம் என பேர்
“ இது அடியில் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்கு புலப்படாமல் அணுவுக்கணுவாய் – ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் – ஆன்மக்காட்சியில் அருகி தோன்றுவதாய் – இரண்டற நிற்கும் “ - இந்த விளக்கத்துக்காகத்தான் இந்த பதிவு
அதாவது கண் – மனதுக்கு புலப்படாததாய் விளங்கும் பெரு வெளி அனுபவம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.