Thursday, April 16, 2026

உச்சிக் குளிர்தல் – சன்மார்க்க விளக்கம்

உச்சிக் குளிர்தல் – சன்மார்க்க விளக்கம் என் உச்சி குளர்ந்தது – இவ்வாறு பலர் கூற கேள்விப்பட்டிருக்கோம் இதன் பொருள் ?? அதாவது பிரமரந்திரத்தில் ஆன்மா பந்தித்திருக்கும் மலம் எரிந்து நாசமான பின் – அது உண்டாக்கும் வெப்பம் இனி கிடையாதாகையால் 2 அங்கு அமுத வெள்ளம் உருவாகி இருப்பதாலும் – அது உண்டாக்கும் குளர்ச்சி காரணமாகவும் 3 அதன் மேல் – பூரண சந்திரன் உருவாவதாலும் – அது உண்டாக்கும் குளிர்ச்சியாலும் – நம் உச்சி குளிர்ந்து போகுது இதன் அனுபவம் தான் இந்த மொழியாக நம்மிடை உலா வருது ஆனால் நாம் சாதாரண மக்கள் – நல்ல சேதி – நல்ல நிகழ்ச்சி நடந்தாலே – உச்சி குளர்ந்தாலே இப்படி கூறுதல் வழக்கமாய்விட்டது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.