Saturday, April 25, 2026

திருவருட்பா – அருள் விளக்க மாலை

திருவருட்பா – அருள் விளக்க மாலை கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது குலத்தாரே “ நீஎனது குலத்துமுதல் மகனே “ மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம் வளரவளர்ந் திருக்க என வாழ்த்தியஎன் குருவே நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில் புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே. “ நீஎனது குலத்துமுதல் மகனே “ – இந்த வரி என் மனதுள் ஒரு சந்தேகமாக நீண்ட நாள் இருந்தது அதென்ன முதல் மகன் ?? பின் மற்றவர் எலாம் ?? இது பத்தி ஆய்ந்ததில் என் அனுமானம் தான் – அறுதி இறுதியாக உரைக்கவில்லை 1 கொல்லாமை நெறியால் இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை ஏனெனில் வள்ளுவர் – மூலர் உள்ளிட்ட ஞானியர் இதை வலியுறுத்தி பாடிவிட்டனர் 2 இது உடல் சேர்க்கையும் - அதனால் வரும் விந்து நீக்கம் குறித்ததும் அல்ல – ஏனெனில் இதில்லாமல் ஞானம் அடைதல் சாத்தியமேயிலை - இதை எல்லா ஞானியரும் மேற்கொண்டு தான் ஞானம் அடைந்திருப்பர் ஆதலாம் இவர் முதல் மகன் ஆக முடியாது 3 மேலும் எல்லா சமய மத தலைவர் – 12 – துவாதச நிலை – 13 திரையோத சாந்த நிலை வந்திருப்பர் அதுக்கு மேல் சுத்த சன்மார்க்க அனுபவம் என உரை செய்திருப்பதில் – மற்ற சித்தர் ஞானியர் எல்லவரும் ஜீவ சமாதி அடைந்தனர் – இல்லை மரணித்தனர் என கொள்ளலாம் 4 ஒரே ஒரு சித்தர் – சிவவாக்கியர் மட்டும் தான் இதெலாம் தாண்டி – திருச்சிற்றம்பல நிலை வரை தன் அனுபவம் பாடுகிறார் நல்ல வாசல் – சுழுமுனை வாசல் நாத வாசல் – சுழுமுனை உச்சி வாசல் எல்லை வாசல் – சிற்றம்பல வாசல் ஆதலால் இந்த அனுபவம் கூட இருக்க முடியாது பின் எது இருக்க முடியும் எனில் ?? இது வரையில் இந்த அகில உலகமே கண்டிராத பார்த்திராத - உடல் அருள் அணுக்களாக வேதிக்கப்பட்டு அது அண்ட சராசரமெங்கும் தூவப்பட்ட ஞான தேகம் – அந்த அனுபவம் கைவரப்பெற்றது இவர் ஒருவராகவே இருக்கக்கூடும் அதான் “ நீஎனது குலத்துமுதல் மகனே “ என புகழ்ந்து அபெஜோதி உரைக்கின்றது போலும் ?? இது எனது கருத்து தான் மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கலாம் இதுக்கு பாதி விடை சரியாக அளித்த திருமதி கல்யாணி சேகர்க்கு வாழ்த்துக்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.