Sunday, April 12, 2026

வாலறிவும் - நூலறிவும் “

வாலறிவும் - நூலறிவும் “ ( சந்தைப்படிப்பும் சொந்தப்படிப்பும் ) குறள் : 1 கற்றதனால் ஆய பயனென்கொல் “ வாலறிவன்” நற்றாழ் தொழார் எனின் “ வாலறிவு “ என்ற இந்த வார்த்தை வள்ளுவர் முதன் முதலில் பயன்பயடுத்தியுள்ளார் 2 வள்ளல் பெருமான் பள்ளிப்படிப்பு கூட முடிக்கைவிலை என்ற சேதி நிறைய பேர்க்கு தெரியாது – ஆனால் அவர்க்கு அறிவியல் - இலக்கியம் - வான சாத்திரம் – யோகம் - சாத்திரம் இதில் இருந்த அறிவு தற்காலத்து எவர்க்கும் ஏன் ?? விஞ்ஞானியர்க்கு கூட கிடையா என்பது உண்மை 3 இந்தி படம் KRISH ல் , நாயகன் ஹ்ரித்திக் ரோஷன் – ஒரு நூலை அப்படி இப்படி புரட்டுவார் – அதை படித்து முடித்துவிடுவார் – அவ்ளோ வேகம் மற்றவர் ஒரு சந்தேகம் கேட்க – இந்த பக்கத்தில் இந்த வரியில் பதில் இருக்கு என பதில் உரைப்பார் ஆமாம் இதை எலாம் நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என வியப்பாக இருக்கா ?? இது தற்கால வியாபார உலகத்துக்கு மிகவும் தேவையான நெருக்கமான விஷயம் தான் இது ஏனெனில் தற்கால வியாபாரம் எலாம் மின்னல் வேகத்தில் தான் நடைபெற எதிர்ப்பார்க்கிறார் - இப்போ ராமசாமி மாதிரி – பொறுமை இல்லை மேலே குறிப்பிட்ட நபர்களிடத்தில் அற்புத ஆற்றலாகிய - கடவுள் அறிவு – அருளறிவு - வாலறிவு இருந்தது ஒளி மூலம் கற்றல் எனும் சித்தி இருந்தது Knowledge by Light and Learning by LIGHT ஆனால் நாம் ஜட அறிவு - நூல் அறிவு கொண்டு கற்பது என்பது மாட்டு வண்டி பயணம் போல் மெதுவாக பயணம் செய்தல் போலாம் - ஒரு பட்டம் பெறுவதுக்கு பலப்பல ஆண்டுகள் ஆகிவிடுது - இது ஜட அறிவு கொண்டு அறிவதாகும் அதனால் இது உலக வாழ்வுக்கு தான் வழி வகுக்குமே அல்லாது பர வாழ்வுக்கல்ல ஆனால் ஞானியர் அருள் வாலறிவு கொண்டு – விழிப்புணர்வு கொண்டு – ஒளி கற்றல் மூலம் – மிக மிக வேகமாக கற்கலாம் எங்கிறார் வள்ளல் தன் உரை நடைப்பகுதியில் : “ ஆயிரம் ஜென்மம் உடை கலை அறிவை ஒருவன் அருள் முன்னிடமாக கற்றால் – சுத்த சிவ நோக்கத்தாலறிய முற்பட்டால் , ஒரு கணத்தில் படித்து முடித்துவிடலாம் “ என உரைக்கிறார் அருள் அறிவு வாலறிவின் வல்லமை எத்தகையது என கற்பனை செய்து பார்க்கவும் இது தான் “ உள் விழிப்பின் உன்னதம் மகத்துவம் “ வாலறிவு = ஒளி அறிவு – ஒளி மூலம் கற்றல் ஆம் அகவல் : ஓதாது உணர்ந்திட ஒளி அளித்தெனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்சோதி அதனால் நாம் வாழும் வாழ்வுக்கும் உலகத்திலும் – அறிவுடை மக்கள் உலகத்துக்கும் அவர் வழி நடத்தும் விதிகள் சட்ட திட்டங்கள் எலாம் வேறு அதனால் நம் கல்வி எலாம் “ சந்தைப்படிப்பு - சொந்தப்படிப்பு அல்ல “ எங்கிறார் வள்ளல் எவ்ளோ உண்மை உண்மை ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.