Saturday, April 11, 2026

கல்வி ஞானியரும் மெய் ஞானியரும்

கல்வி ஞானியரும் மெய் ஞானியரும் கல்வி ஞானியரும் மெய் ஞானியரும் இந்த இருவரும் எக்காலத்திலும் உள்ளனர் என்பது உண்மை கல்வி ஞானியர் : யார் எனில் தமிழில் முது கலை பட்டம் பெற்று , அதன் புலமை கொண்டு சித்தர் பாடல்களுக்கும் திருவருட்பா போன்ற பாடல்களுக்கும் அருத்தம் கூறி வருவர் . இவர்களின் பொருள் தவறாகவே இருக்கும் – ஏனெனில் அனுபவம் இல்லாததால் தவறு . தமிழ் புலமை வேறு அனுபவ ஞானம் வேறு . இவர்கள் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களாக இருப்பர் உதாரணம் : அருள் பாவலர் சக்திவேல் – அகவலை தினமும் பாராயணம் செய்து வந்தாலே போதும் – நம்முளிருக்கும் எல்லா மாயத் திரைகளும் விலகிவிடும் என்று உளறுகின்றார் – அவருக்கு திரை விலக்கம் எப்படி செய்வது என்றே தெரியவில்லை இவருக்கு அருள் பாவலர் என்ற பட்டம் யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை ஈரோடு கதிர்வேல் – எட்டிரண்டு என்பதன் விளக்கம் – ஏதேதோ கூறி இருக்கின்றார் – உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை இவர்கள் தான் கல்வி ஞானியர் மெய் ஞானியர் : பக்குவம் அடைந்து , சாதனையில் புகுந்து , அனுபவத்திற்கு வந்து கைவல்ய நிலை அடைந்திருப்பர் . மெய் ஆகிய ஆன்மாவை இந்த உடம்பாகிய மெய்யில் அனுபவத்திருப்பர் என்பது உண்மை. அவர்கள் சுழிமுனை அனுபவம் பெற்றிருப்பர் உலகம், சன்மார்க்கம் இனம் கண்டு கொள்ள வேண்டும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.