Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 9 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 9 விளக்கம் இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே கோவே உன்றன் அருட்சிற் சோதி என்னதாயிற்றே ( பாடல் 57 ) இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனினான் விடுவனோ – திருவடியை – ஆன்மாவை இறுகப் பற்றிக் கொண்டேன் , அதனை இனி விட மாட்டேன் எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ – ஆன்மாவைப் பற்றியபின் உலகில் வேறு எதனையும் நினைக்க மாட்டேன் – பற்ற மாட்டேன் குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே – மரணம் என்னைப் பார்த்து பயந்து ஓடிப் போயிற்றே திரண்ட கருத்து : திருவடியைக் கொண்டு ஆன்மா நிலையை அடைந்ததாலும் ஆன்மாவை விடாமல் பற்றியதால் – வேறெதனையும் பற்றாததனால் யமன் என்னைப் பார்த்து பயந்து ஓடிப்போனது என்று திருவடிப் பெருமை = ஆன்மாவின் பெருமையையும் பாடுகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.