Monday, April 13, 2026

பாரதம் - புதிர் 2

பாரதம் - புதிர் 2 கண்ணனின் அண்ணன் பலராமர் தன் கையில் கலப்பை வைத்திருப்பார் ஏனெனில் ?? எனக்கு வந்த விஷனில் : ஒருவர் வந்து கலப்பையால் சுவற்றில் வெட்டி வெட்டி ஒரு துளை உண்டாக்குகிறார் வாசகம் சு மாணிக்க யோகீஸ்வர்ர் உரை பார்த்தேன் அதில் : கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்க முடியும் என போட்டிருந்தது எனக்கு வாசல் திறக்கப்போகிறார் என்பதை சூசகமாக காட்டியது அந்த விஷன் இந்த அரிய செய்தியை உலகுக்கு தெரிவிக்கத் தான் பலராமர் தன் கையில் கலப்பை வைத்துள்ளார் பாரதம் ஞானப்பொக்கிஷம் – அதை பார்க்கும் விதத்தில் நோக்கினால் சரியான விதத்தில் பார்க்காததால் , ஞானத்தை விட்டார் நம் அன்பர் சடங்கில் அன்னதானத்தில் நிற்கின்றார் இதை புரிந்து கொள்ளவே தனி அறிவு வேணும் அது இல்லாததால் இவ்ளோ கொழப்பமும் இது கூறும் பெரும் பொருள் ஆய்வு செய்து கண்டு பிடிக்க அறிவிலாதார் - சன்மார்க்கம் இதை ஏற்பதிலை என ஒதுக்கி வைத்துளபடியால் – தவம் சாதனம் என்ன என தெரியாதபடி இருளில் மூழ்கி இருக்கார் . ஆனால் பேசுவது மட்டும் ஏதோ எல்லாத்தையும் தெரிந்து , கரை கண்டு விட்டது போல் சித்தர் , மத்த ஞானியரை மதிப்பதிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.