Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 15 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 15 விளக்கம் வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே வஞ்ச வினைகள் எனை விட்டோடித் தலை வணங்குதே எள்ளாது உனது புகழைக் கேட்கச் செவி நயக்குதே எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம் வியக்குதே ( பாடல் 33 ) வஞ்ச வினைகள் எனை விட்டோடித் தலை வணங்குதே – ஆன்மாவின் எழுச்சியினாலும், ஆன்மாவின் சன்னிதானத்தில் அவரது உணர்வு சென்ற போது , அதனால் வினைகள் எல்லாம் ஓடியது எந்தாய் தயவை எண்ணுந்தோறும் உளம் வியக்குதே – ஆன்மா அவர் ஜீவன் மீது காட்டிய கருணை பரிவு எண்ணும் தோறும் வள்ளலுக்கு ஆச்சரியம் மேலோங்கி நிற்கின்றது திரண்ட கருத்து : ஆன்மா இயற்கையிலேயே தயவே வடிவானது என்பதை மறந்து விடக் கூடாது – அதனால் தான் ஜீவன் கண் கருணை தயவு மழை பொழிகின்றது – அதனால் மலங்கள் கழிந்து தன் சுய தரிசனம் ( ஆன்ம ) சித்தி ஆகின்றது ஆன்மாவின் உதவி இல்லாமல் மலக் கழிவும் ஆன்ம தரிசனம் சாத்தியமே இல்லை என்பது உறுதி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.