Monday, April 13, 2026

அகத்தியர் பாடல் – இன்றைய சன்மார்க்கத்தார்க்கு ஏற்றது

அகத்தியர் பாடல் – இன்றைய சன்மார்க்கத்தார்க்கு ஏற்றது அகத்தியர் பூரணம் 1200 தன்னைத்தான் அறியாத மூடர் தானும் சாத்திரத்தின் படியறிந்து தன்னைக்காத்து விண்ணைத்தான் நோக்கும் வகை அறியமாட்டான் வேதாந்த பூரணத்தை விரும்ப மாட்டான் கண்ணைத்தான் அறிந்து மனக்கண்ணைக் கொண்டு காலறியா பாவிகளைக் கண்டாயானால் மண்ணைத்தான் அள்ளியவன் வாயில் போட்டு மதிகதிரில் நின்ற குறி காட்டுவாயே பொருள் : ஆன்ம ஞானம் இலா மூடர் – சாத்திரம் படித்தும் அதன் படி தவம் செய்து , தன்னை மரணத்தில் இருந்து காத்துக்கொள்ள அறியார் தவத்தில் சிரசு நோக்க அறியமாட்டான் வேதாந்தம் உட்பட ஆறந்தம் அப்பால் நின்ற ஆன்மா – பூரணம் காண ஆசைப்பட மாட்டான் கண் கொண்டு தவம் செய்ய அறியாத பாவிகளைக் கண்டால் அவன் வாயில் மண் அள்ளிப்போடு என்கிறார் அகத்தியர் இது சித்தர் சாபம் ஆம் சரியாக இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.