சிரிப்பு
உண்மை சம்பவம் கோவை ஜீலை 2024
ஒரு சித்த வித்தை பயிற்சியாளர் என்னிடம் தொலை பேசியில்
அவர் :
உங்க பதிவு படிக்கிறேன் . ஆனால்
“ மனமே குரு – ஜீவன் ஈஸ்வரன் “ ஆக வேணும் இது உச்ச கட்ட அனுபவம்
நான் : எப்படி எந்த ஈஸ்வரன் ஆவது ?
ஈஸ்வரன் எனில்
சனிக்கு கூட ஈஸ்வரன் பட்டம் இருக்கு சனீஸ்வரன்
இராவணன் கூட இலங்கேஸ்வரன் என பேர்
அது மாதிரியாகவா ??
அவர்க்கு கோபம் வந்துவிட்டது
அவர் : இல்லை இல்லை
நான் : பின் என்ன ??
மனம் எப்படி குரு ஆகும் ?
அது 36 தத்துவத்தில் ஒன்று
சுத்த சிவம் , தத்துவம் எல்லாம் தாண்டி விளங்குது
நீங்க இன்னும் தெளிவு அடைய வேண்டும் என்றேன்
அவர் : கோபத்தால் கைபேசி வைத்துவிட்டார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.