Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 14, 2026
ஔவையார் – அரியது
ஔவையார் – அரியது
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே.
பொருள் :
எளிதான பாடல் தான்
விளக்கம் தேவையிலை
தானம் தவம் ஆற்றல் அரிது
அவ்வாறு ஆற்றுவார்க்கு – சொர்க்கம் புக வாசல் திறக்கும்
இது அக்காலத்திலேயே பாடப்பெற்றிருக்குது
அது இன்றும் நடைமுறைக்கு ஒத்து வருது
பாருங்கள் : நம் அன்பர் – அன்னதானம் தான் செய்கிறார்
தவம் தியானம் சாதனம் இலை
அதனால் அவர்க்கு சுய தரிசனம் கிடையாது – அடைய முடியாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.