Thursday, April 16, 2026

திருவடிதவப் பெருமை

திருவடிதவப் பெருமை வள்ளல் இயற்றிய அற்புதம் உண்மைச் சம்பவம் - ஜீன் 2020 சென்ற மாதம் ஒரு திருச்சி அன்பர் திருவடி பயிற்சி பெற்றார் ஆனால் அவர் ஏற்கனவே குமரி செல்வராஜ் அவரிடம் பயிற்சி பெற்றதால் , அது அவர்க்கு இடையூறு செய்து – கண்ணில் எரிச்சல் கொடுத்து , புது கண்ணாடி பயிற்சிக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தார் சரி என , நான் கண்ணாடி பயிற்சி முடித்த பின் – விளக்கை கண்ணாடிக்கு சுற்றி காண்பித்து – திருவடி வணங்கி – திரு ஞான சம்பந்தர் மேல் வள்ளல் பாடிய பாடல் – பாடி உதவுமாறு வேண்டக் கூறினேன் மேலும் உங்களுக்கு உதவ நானும் திருவடியிடமும் – பிரபஞ்சப் பேராற்றலிடமும் வேண்டுவதாக கூறினேன் இந்த உரையாடல் நடந்தது மதியம் – உணவுக்கு முன் என்ன அற்புதம் ? மாலை 4 மணிக்கு எலாம் ஒரு விஷன் அதில் வள்ளல் பெருமான் வந்து – தன் இரு விழிப்பார்வை – விளக்கின் மீது விழுகிறது - அவ்வளவு தான் புரிந்து விட்டது அவர் பார்வை – அருட்பார்வை அவர் பிரச்னை தீர்த்துவைத்துவிட்டது உங்கள் பிரச்சினை வள்ளல் பெருமான் தீர்த்து வைத்துவிட்டார் – வருத்தம் வேண்டாம் இனி அந்த எரிச்சல் வரவே வராது என உறுதி அளித்தேன் உண்மையாகவே அவர்க்கு கண்ணாடி பயிற்சியின் போது எரிச்சல் உண்டாகவிலை என தெரிவித்தார் இது தான் ஞானியரின் அற்புத திருவிளையாடல் குமரி செல்வராஜிடம் பயிற்சி பெற்ற அனேகர் என்னிடம் இந்த பிரச்னை தெரிவித்துள்ளார் அதனாலே அவர் பயிற்சி தொடர முடியவிலை எனவும் – ஈடுபாடு போய்விடுது எனவும் கூறியுள்ளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.