Wednesday, April 22, 2026

குறள் - சன்மார்க்க விளக்கம்

குறள் - சன்மார்க்க விளக்கம் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் பொருள் : நம் இந்திரியப் பொறிகள் - மெய் வாய் கண் மூக்கு செவி சதா எரிந்த படி உள அவைகள் அக்னி மூலையில் இருப்பதாலும் அவை எரிந்த படியும் - உலக வாழ்வு நோக்கி செயல்படுது ஐந்தவித்தல் = ஐம்பொறிகளை அக்னி மூலையில் இருந்து - பிரணவத்தில் சேர்த்தல் ஆகும் அதுக்கு கண் தவம் செய வேண்டும் இதைத்தான் திருவிளையாடற் புராணத்தில் - சுத்த சிவம் வலை வீசி மீனை பிடித்ததாக சித்தரித்துள்ளனர் வலை = கண் மீன் = இந்திரியங்கள் இந்த கண் தவமானது இந்திரியங்களை அக்னி மூலையிலிருந்து பிரணவத்தில் சேர்த்துவிடும் வல்லமை உடைத்து மேலும் அவித்தல் என்பது நிலை மாற்றல் மாதிரி - அதாவது கடலை அவித்தல் மாதிரி நம் இந்திரியங்களை உலக நோக்காக இருப்பதை மாற்றி - உள்ளே திருப்பி - ஆன்ம நோக்கமாக மாற்ற செய்தல் ஆம் இது அவைகளை ஒழுக்க நெறியில் நிற்க வைப்பதாகும் இவ்வாறு யார் ஆற்றுகிறாரோ ?? அவர் இந்த அவனியில் நீடூழி வாழ்வார் எங்கிறார் வள்ளுவர் வெங்கடேஷ் குறிப்பு : குறள் ஒரு ஞான நூல் - எனவே இதுக்கு உரை விளக்கம் மெய்ஞ்ஞானியரால் கொடுக்கப்பெற்றதை தான் படிக்க வேணும் - கல்வி ஞானியர் கொடுத்ததை அல்ல அதுவும் அரசியல் தலைவர் உரை எலாம் படிக்கவே கூடாது venkatesh

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.