Thursday, April 16, 2026

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும்

நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக நம் நாட்டிற்கு வந்து நம் கலாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வாய் பிளந்து நின்றனர். எல்லாவற்றிலும் தன்னிறைவோடு விளங்கி நின்றனர். அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். நம் கலாச்சாரத்தை அழித்து , அதற்குப் பதிலாக அவர்கள் .கலாச்சாரத்தைப் புகுத்தி நம்மவர்களைக் கீழ்ப்படுத்தி, நம்மை அடிமைப்படுத்தி, நம்மை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். நம் முன்னோர்களிடதில் இருந்த அறிவு யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாததாக விளங்கியது என்றே கூறலாம். உதாரணங்கள் : 1. கூந்தல் சடை : இளம் பெண்கள் தங்கள் கூந்தலை மூன்று சடைப் போட்டு , அதன் பின் மண்டையில் முடிச்சு போடுவர். அர்த்தம் : மூன்று நாடிகளும் – ( இட – பிங்கலை – சுழிமுனை ) பின்னிப் பிணைந்து , சுழிமுனையில் சேர்கிறது என்பதைக் காட்டத்தான் இந்த புறச் செயல் பிராமணர்கள் அணிந்திருக்கும் பூணூலுக்கும் அருத்தம் இது தான் 2. ஐயர்கள் தங்கள் கேசத்தை நீக்கி , பின் மண்டையில் சிறிது முடியை மட்டும் வைத்திருப்பர் அர்த்தம் : கேகசத்தை நீக்கியது = மாயக் காடுகள் அழித்து விட்டோம் என்பது உலகிற்கு தெரிவிப்பது பின் மண்டை சடைப்பூண்டு = நெற்றிக்கண் திறப்பது பற்றியது 3. கர்ப்பிணிப் பெண்களுக்கு 7ஆம் மாதம் சீர் செய்யும் போது – கூந்தலில் பூ முடித்து , பின் மண்டையில் எல்லா நிற கற்களை உடைய ஒரு பில்லை போன்ற ஒரு ஆபரணத்தை வைப்பர் எல்லா நிற கற்களை உடைய பில்லை போன்ற ஆபரணம் = நவரத்தினமயமாகிய ஆன்மாவைக் குறிக்கின்றது மேலும் அச்சமயத்தில் , சூரிய & சந்திர பிரபைகளை முன் நெற்றிக் கேசத்தில் பதிப்பர் அருத்தம் : சூரிய & சந்திரக் கலைகளாகிய சுவாசம் , நெற்றிக்கு மேலேற வேண்டும் என்பதை தெரியப் படுதத்தான். 4. பெண்கள் கூந்தலை கொண்டைப் போட்டு , அதில் வகை வகையான பூவைச் செருகி வைப்பர். அருத்தம் : ஆன்மாவாகிய பூ அங்குதான் இருக்கிறது என்பதைக் காட்டத்தான் 5. செத்த பிணத்தின் நெற்றியில் நாமம் இடுகின்றனர் அருத்தம் : நாமம் கீழிலிருந்து மேல் செல்கின்றது- அப்படியெனில் அவர் மீண்டும் இந்தப் புவியில் பிறக்க மாட்டார் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கன்றனர் நாமம் = மீண்டும் வாரா நெறிக்கு சென்று விட்டார் என்று கூறுகின்றார். இந்த வழக்கத்தினால் தான், ஒருவனிடம் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை எனில் , அவன் என்ன நாமம் போட்டுவிட்டானா என்று கேட்கிற வழக்கம் வந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.