இதிகாச பெருமை
உண்மை சம்பவம் - 2021
பாரதம் :
ஒரு நாள் அர்ஜீனன் கை நிறைய பூ எடுத்து வருவான் பூஜை செய்ய
அதுக்கு முன்பே அங்கு எக்கச்சக்க மலர்கள் சாமி மீது இருக்கும்
பார்த்து அதிர்ந்து , கண்ணனிடம் : யார் அது கண்ணா , நான் எடுத்து வரும் முன்பே வைத்தது ?? என கேட்பான்
கண்ணன் : அதுவா ?? அது பீமன் வேலை என்பான்
பீமனிடம் விசாரித்ததில் , நான் வனத்தில் பார்க்கும் மலர்கள் எல்லாவற்றையும் “ கிருஷ்ணார்ப்பணம் “ என வாயால் கூறிவிடுவேன்
அத்துடன் என் பூஜை முடிந்தது என்பான்
என் வாழ்வில் :
இதை படித்த பின் , நானும் தோட்டத்து மலர்கள் – தேசிய நெடுஞ்சாலையில் – சாலையில் இருக்கும் மலர்கள் யாவும் “ திருவடிக்கு சமர்ப்பணம் “ என மனதால் எண்ணிக்கொள்வேன்
இவ்வாறு சுமார் 15 ஆண்டாக தொடர்ந்து செய்தும் வருகிறேன்
ஒரு நாள், நாம் மனதால் நினைப்பது உண்மையில் திருவடிக்கு போய் சேருதா ?? இலை வெறும் வாய் வார்த்தை தானா ?? என நினைத்ததுண்டு
அப்போதெலாம் இந்த கேள்விக்கு பதில் வந்ததிலை
அதன் பொருள் மலர்கள் திருவடிக்கு சேரவிலை
சென்ற மாதம் ஜனவரி 2021 , மதுரைக்கு திருமணத்துக்கு செல்லும் வழியில் மலர்களை “ எல்லாம் திருவடிக்கு சமர்ப்பணம் “ என வழக்கம் போல் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன்
என்ன வியப்பு ??
அப்போதே விஷன் காட்டியது :
யாரோ ஒருவர் என் வீட்டுக்குள் , சாக்கு மூட்டை நிறைய பூக்கள் உடன் நுழைகிறார் – எலாம் அரளி பூக்கள்
அவர் என் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சாமி படங்களுக்கு மலர்கள் வைத்து வணங்குகிறார்
சாக்குப்பையில் இருக்கும் மலர்கள் யாவையும் அங்கே கொட்டி விட்டு சென்று விடுகிறார்
இத்தனை ஆண்டுகளாக வராத பதில் – நான் தகுதி பெற்றவுடன் – தெய்வம் என் கேள்விக்கு பதில் அளித்துவிட்டது
சமீபகாலமாகத் தான் அந்த மலர்கள் திருவடிக்கு செல்கிறது
பல ஆண்டுகள் அது வெறும் வாய் ஜாலமாக தான் இருந்திருக்கு
தவம் நல்ல நிலைக்கு வந்துளது என்பதை இது காட்டுகிறது
வாய் விட்டு சொல்வதும் , மனம் நினைப்பதும் உண்மையில் நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி , வியப்பு தான்
இப்போது நான் ஆசீர்வாதம் செய்தால் – அது நிச்சயம் நடக்கும் என நம்பிக்கை வந்திருக்கு
இது தான் பெரியோர் ஆசீர்வாதத்தின் சூக்குமம் - மன வளக்கலை மன்றத்தின் “ வாழ்க வளமுடன் “ சூக்குமம்
ஆனால் மன்றத்து மக்களுடையது வெறும் வாய் வார்த்தை தான்
உண்மையில் நடப்பதேயிலை
எலாம் தவத்தின் ஆற்றல் – மகிமை
மனம் அடங்கி அதன் பயனால் கற்பக நிலை அடைந்துளது இந்த சம்பவம் காட்டுது
எலாம் கண்மணி – திருவடி தவம் பெருமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.