Tuesday, April 14, 2026

இக்காலத்தில் குரு எப்படி ??

இக்காலத்தில் குரு எப்படி ?? எனில் ?? அஸ்திவாரம் இல்லா கட்டிடம் மாதிரி பேசிக்கொண்டே போகின்றார் - பயிற்சியும் அளிக்கிறார் 1 திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா – பல நூல் எழுதியிருப்பினும் - பயனிலை எல்லாத்துக்கும் தயவு – தயா ஒழுக்கம் – என இதையே சதாகாலமும் கிளி போல் உரைத்தபடி இருப்பார் இவர் சன்மார்க்கக் கிளி – நானும் தான் – திருவடி – கண் தவம் வலியுறுத்தும் கிளி ஒரு சாதனமும் வேண்டாமாம் – அதனால் ஒன்றும் செயவிலை - ஒரு அனுபவமுமிலை சாமி – தயா ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் போதும் , தவம் சாதனம் எதுவும் தேவையிலை – நெற்றிக்கண் திறந்து கொள்ளும் – எல்லா சித்தியும் கைவசம் – நல்ல சிரிப்பு வேடிக்கை இலையா ?? இவர் தொண்டரும் சீடரும் இதை “ நம்பி “ = மோசம் போய்விடுகிறார் இவர் சத்திய ஞான சபை தத்துவ விளக்கம் நூலில் – மிக முக்கியமான விளக்கமாக – எப்படி உச்சிக்குழி சேர்வதுக்கான உடல் அமைப்பு பத்தி விளக்கம் அளிக்கவிலை அவர்க்கு அது பத்தி அறியவிலை – அருள் இல்லை ஆனால் இவரோ சித்தர்க்கு அருள் விளங்காத காரணத்தால் அவர் மரணமிலாப்பெரு வாழ்வு அடையவிலை என குறை காண்கிறார் – சிரிப்பு தான் அவராவது ஜீவ சமாதி அடைந்தார் எனில் , இவர் மரணம் தான் தழுவினார் – அதை அவர் மக்கள் ஏற்றுக்கொள்வதிலை ஆனால் சித்தர் பெருமக்களோ – அவர் காட்டிலும் அறிவில் – அனுபவத்தில் பன்மடங்கு உயர்ந்து விளங்குகிறார் என்பதில் ஐயமிலை இவர் – தன் பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டி – தயாபெருஞ் ஜோதி என புது மந்திரத்தை அருட்பெருஞ்சோதிக்கு இணையாக ஏற்படுத்தினார் பின்னர் – சத்திய ஞானக்கோட்டம் என சத்திய ஞான சபைக்கு ஈடாக கட்டினார் 2 சேலம் குப்புசாமி – பலப்பல நூல் – ஒலி நாடா இருப்பினும் – தவத்தில் எப்படி திருவடி – கண் பயன்படுத்தி – நெற்றிக்கண் திறப்பது என்பது தெரியவிலை திருவடி ஞானம் இல்லை அதனால் இவர்க்கும் அனுபவமே இலை நூல் எழுதுவது – ஒலி நாடா வெளியிடுவது தான் வேலை ஆனால் இருவரும் முடிவு – வெட்டவெளி – பகரக்குழி என சரியாக உரைக்கினும் , அதை சென்று அடையும் வழி தெரியவிலை சேலத்துக்காரர் - உலகில் இருக்கும் எல்லா யோகத்துக்கும் விளக்கம் அளித்து விட்டு , சன்மார்க்க தவம் – கண்ணாடி – விளக்கு வைத்து செய்வது எப்படி என் தெரியவிலை கண்ணின் உஷ்ணம் கிரகித்து அதை நெற்றிக்கு உளே செலுத்த வேணுமாம் - அப்போது அது திறந்து கொள்ளுமாம் நல்ல சிரிப்பு வேடிக்கை இலையா ?? இருவர்க்கும் புருவக்கண் பூட்டுக்கும் நெற்றிக்கண்ணுக்கும் வித்தியாசம் தெரியவிலை புருவமத்திக்கும் நெற்றி நடுவுக்கும் வித்தியாசம் தெரியவிலை ஆனால் சன்மார்க்கத்தில் தவிர்க்க முடியாத பெரும் புள்ளிகள் ஆகிவிட்டார்கள் 3 வேதாத்திரி திருவடி ஞானம் இல்லாதவர் . இவர் தன் பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டி , மன வளக்கலை மன்றம் ஏற்படுத்தி , ஓங்கார மண்டபம் கட்டினார் ஆனால் இவர் அளிக்கும் குண்டலினி - காயகல்பம் விளக்கமும் – பயிற்சியும் தவறானதாகும் அடிப்படை இல்லா சேதியாகும் இவர் வழிவரும் சீடர்கள் தொண்டர்களும் – அந்த தவறை – அப்படியே ஒத்தி எடுத்து செய்து வருகிறார் – பரப்பியும் வருகிறார் என்ன இன்னம் கொஞ்சம் மசாலா சேர்த்துக்கொள்கிறார் – தற்காலத்துக்கேற்றபடி இப்படித் தான் இருக்கார் தற்கால யோகக் குருக்கள் ஆனால் சு மா யோகீஸ்வர்ர் உரை – அனுபவ – ஞான உரை ஆம் அதனால் இவர் நூல் முன் இவர் எல்லா நூல் நிற்க முடியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.