Friday, April 17, 2026

முக நூல் நட்பினால் நான் அடைந்த பயன்

முக நூல் நட்பினால் நான் அடைந்த பயன் எந்த ஒரு சந்திப்பும் எங்குமே – சும்மா பொழுது போகவிலையெனில் நடைபெறுவதிலை அதுக்கும் ஒரு பெரிய காரணம் இருக்கு எனக்கு கிடைத்த உண்மை அனுபவம் இந்த உண்மை சம்பவம் தான் இந்த பதிவு 1 நெற்றிக்கண் இது பத்தி பல்லாண்டுகள் ஆய்வு செய்து - இதன் இடம் – வடிவம் – அடையும் முறை வழி எல்லாம் தெரிந்த பின் , எனக்கு ஒரு சந்தேகம் – நாம் செய்திருக்கும் இறுதி முடிவு சரிதானா ?? அப்போது நான் மூன்றாவது கண் எனும் ஆங்கில குழுவில் உறுப்பினர் – பதிவுகளும் செய்து கொண்டிருந்தேன் அதில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து என் பதிவுக்கு பதில் அளித்திருந்தார் அதில் நான் எண்ணியது சரிதான் என அந்த பதில் அமைந்திருந்தது அதில் அவர் அது பீனியல் சுரப்பி அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது எனக்கு வியப்பளித்தது ஆஹா உண்மை உரைத்துவிட்டாரே ? என் சந்தேகம் தீர்ப்பதுக்காகத்தான் நான் இந்த குழுவில் சேர்ந்தேனோ ?? என எண்ணினேன் 2 திருவாசகம் – சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை – இது அனுபவ உரை ஆகும் இதில் ஒரு குறிப்பிட்ட விளக்கம் – 20 ஆண்டுகளாக ஆய்வு செய்த பின்னும் எனக்கு விளங்கவிலை அதில் ஒரு வரி கூட புரியவிலை பின்னர் தான் 4 ஆண்டுக்கு முன் ஒரு முக நூல் நண்பர் ஒரு பதிவில் என் சந்தேகம் தீர்க்கும் பதில் அந்த பதிவில் இருந்தது நான் நினைத்துக்கொண்டேன் – பிரபஞ்சம் - என் சந்தேகத்தை தீர்ப்பதற்காகத் தான் இவரை என் நண்பராக்கியதோ ?? எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.