Monday, April 13, 2026

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் - “ பத்தாம் வாசல் “ பெருமை

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் - “ பத்தாம் வாசல் “ பெருமை அறிவான கண்ணெதென்றால் புருவவாசி அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால் முறிவான பூட்டுடைத்து புருவமத்தி மூக்கோடும் வாசியது நெற்றியேறில் தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல் சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல் குறியான மணிவாசல் – குருவின் வாசல் கோபுர வாசல் தெரிவாயானால் பாரே பொருள் : சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார் மூக்கில் ஓடும் சுவாசம் , வாசல் திறந்து , வாசி ஆகி , மேலேறி நெற்றிக்கு வந்தால் அது தான் 1 பத்தாம் வாசல் 2 சிறிய துவாரம் உள்ள வாசல் 3 அறிவாகிய ஆன்ம வாசல் 4 யோகவாசல் 5 விந்து , மணி ஆகி நிற்கும் மணி வாசல் 6 சிரம் எனும் கோபுரத்தில் இருக்கும் வாசல் என அதன் பெருமை பாடுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.