Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
மெய்யருள் வியப்பு – 6 விளக்கம்
மெய்யருள் வியப்பு – 6 விளக்கம்
அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார்
அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார்
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே
வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68)
அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் – பிரம்மாவும் விஷ்ணுவும் சிவத்தை – APJ ஆண்டவரைத் தேடி தேடி காணாது திகைக்கின்றனர்
அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் – தேவர்கள் நாமெல்லாம் காண முடியாத போது இவன் சிவத்தை காண முடிகிறதென்றால் , இவன் செய்த தவம் தான் என்ன என்று வினவினர்
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – இங்கு தவள மாடம் என்பது ஆன்ம அனுபவத்தைக் குறிக்கின்ற வெள்ளை மாளிகை
தவளம்= வெள்ளை – சாம்பல் பூத்த வெண்மை
திரண்ட கருத்து :
மூவரும் காண முடியாத ஆன்மாவையும்/ சிவத்தை தன் தவத்தால் கண்ட அனுபவத்தை இப்பாடல் மூலம் வள்ளல் பெருமான் விளக்குகிறார்.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.