Tuesday, April 7, 2026

முத்தியும் சித்தியும் – பாகம் 2

முத்தியும் சித்தியும் – பாகம் 2 முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு. இதன் தாத்பரியத்தை இயற்கை புறத்திலே பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளது. உதாரணம் : தேங்காயில் – மூன்று கண்கள் பனைமரக்காயில் மூன்று கண்கள். இந்த மூன்றும் சூக்குமமாய் கலந்தால் , அமுதம் உருவாகிவிடும் . அதனால் தன் தேங்காயில் : இனிப்பு நீரும் – பனங்காயில் : கள்ளும் இருக்கின்றது இதனை சூக்குமமாய் தெரியப்படுத்தவே , சிவன் கோவில்களில், ஒரு கலசத்தை சிவலிங்கம் மீது மூன்று கயிற்றினால் தொங்கவிட்டிருப்பர். அந்தக் கலசம் – அமுதக் கலசம். அக அனுபவங்கள் யாவையுமே புறத்தில் காட்டியிருக்கின்றனர் – நாம் தான் , அதை கண்டு கொள்ளாததினால் , சமயங்கள் கூறுவது யாவும் பொய் என்று கருத்து நிலவுவதால், உண்மை தெரியாமலே இருக்கின்றோம். சாதனம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றோம். வள்ளலார் : கள்ளுண்டாள் எனப் பகன்றார் என்று கூறுகின்றார் முத்தீயை முடித்தாலே, அமுதக் கலசம் உடைந்து, உடலெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஓடும். உடல் காயசித்தி அடைந்துவிடும். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.