Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு 12 விளக்கம்

மெய்யருள் வியப்பு 12 விளக்கம் நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை நாட்டியே நடு நாடிய நின் அருளுக்கென்மேல் என்ன நாட்டமோ நாய்க்கு தவிசிட்டனை நிந்தனக்கிங்கோர் ஆட்டமோ ( 13 ) நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே – பல காலம் கடின தவம் இயற்றினும் எட்ட முடியாத ஏற முடியாத சுழிமுனை அனுபவத்தை அடையச் செய்து நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை நாட்டியே – சுழிமுனை அனுபவத்திற்கு அகத்தும் புறத்தும் நின்று அருள் ஒளி தனக்கு வழி காட்டியது நடு நாடிய நின் அருளுக்கென்மேல் என்ன நாட்டமோ – நடு நாடியாம் சுழிமுனையில் திகழும் அருளுக்கு என் மீது என்ன விருப்பமோ இஷ்டமோ ? என்று வினவுகின்றார் நாய்க்கு தவிசிட்டனை நிந்தனக்கிங்கோர் ஆட்டமோ = மௌனத்திற்கும் ஆன்ம அனுபவத்துக்கும் இட்டுச் சென்று அங்கு என்னை நிலை நிறுத்தினை என்று தன் ஆன்ம அனுபவம் குறித்தும் அதற்கு உதவிய அருள் பற்றியும் பாடுகின்றார் திரண்ட கருத்து : அருள் தன்னை மௌனத்துக்கும் ஆன்ம அனுபவத்துக்கும் கூட்டிச் சென்று நிலை நிறுத்தியதைப் பற்றி இப்பாடலில் குறிப்பிடுகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.