Friday, March 6, 2026

FAQ - என் அதிகமான மாணவர் என்னிடம் கேட்ட கேள்வி

FAQ - என் அதிகமான மாணவர் என்னிடம் கேட்ட கேள்வி எப்படி தவ வாழ்வு அமைத்துக்கொள்வது ?? அதுவும் தடைபடா தவ வாழ்வு ?? இந்த கேள்வி பல முறை பலர் கேட்டுள்ளனர் நான் : அது நம் கையில் இல்லை அருள் கையில் தான் முதலாவது : அதாவது நேரத்தை திட்டமிட்டு செல்வழித்து தவ நேரத்தை கூட்டி செயலாம் சினிமா டிவி குறைத்து தவத்திற்கு ஒதுக்கலாம் சிலர் தம் பணி கூட விட்டுவிட தயாராக இருக்கின்றார் செய்தும் இருக்கார் பின் , ஒரு வயது வரையில் பணி செய்து , செல்வம் எதிர்கால தவ வாழ்வுக்கு திட்டமிட்டு சேர்த்து சேமித்து வைத்து , பின் பணி விட்டு , நிரந்தரமாக தவ வாழ்க்கை வாழ்வது இது ஒரு புறம் இதுக்கும் அருள் உதவி செயணும் முக்கியமாக குடும்பம் – மனைவி ஒத்துக்கொள்ள வேணும் அது எளிதாக நடக்காது நிறைய வீட்டில் பயிற்சி கற்றுக்கொள்ளவே அவர்கள் அனுமதி தேவைப்படுது – அதை அளிப்பதிலை புருஷன் வாழ்வை / விடுதலை மனைவி தீர்மானிக்கும் சூழ்நிலை இது ஒரு கோணம் – நம் கட்டுப்பாட்டில் திட்டமிடுதலில் ஆகும் ஆனால் மற்றது நம் கட்டுப்பாட்டிலும் திட்டமிடுதலில் அடங்காது ரெண்டாவது : வயது ஆக ஆக நமக்கு வரும் உடல் உபாதைகள் பிணி நோய்கள் எப்படி சமாளிப்பது ?? அடிக்கடி மருத்துவமனை சென்று வந்தால் எப்படி தவம் செய்வது ?? ஈதெல்லாம் சமாளிக்க / வினைகள் தகர்த்து எறிந்து தவம் செய்ய , அதில் முன்னேறி அனுபவம் பெற அருள் கொண்டு வினைகள் வெல்லும் வல்லமை பெற்றிருத்தல் அவசியம் மிக மிக அவசியம் ஆம் அருள் பெறுதல் அவ்வளவு சாமானிய காரியமல்ல முதலாவதுக்கு வழி தெரியாதவர் ரெண்டாவதுக்கு எங்கே போவது ?? ஆகையால் முழுமையான தவ வாழ்வு என்பது இக்கால கட்டத்தில் குதிரைக்கொம்பு மாதிரி வெங்கடேஷ் 16:50

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.