Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 25, 2026
திருவாசகம் – சிறப்பு பெருமை - சு மா
திருவாசகம் – சிறப்பு பெருமை
இந்த நூல் பெருமை பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய மனிதன் இல்லை – அனுபவத்துக்கும் வரவிலை
ஆனால் இந்த நூல் செய்த அற்புதம் பற்றி சொல்லத்தான் இந்த பதிவு
இந்த நூல் என் கையில் கிடைத்த ஆண்டு 1998
அப்போதிலிருந்து இதை நான் ஆய்வு செய்து வருகிறேன்
இதிலிருந்து தான் திருவடி கண்மணி தவம் எடுத்து பயின்று வருகிறேன்
சரியாக எப்படி செய்வது என பல ஆண்டுகளுக்குப்பின் தான் கண்டுபிடித்தேன்
காலம் விரயமாயிற்று
இன்னமும் ஆய்வு செய்துகொண்டு தான் இருக்கேன்
இதிலிருந்து தான் முத்தேக சித்தி – பொற்சபை சிற்சபை இடங்கள் – திருவடி விளங்கும் இடம் எல்லாம் அறிந்து கொண்டேன்
வினைகள் தீர்க்கும் வழி எல்லாம் இது தான் எனக்கு கற்றுக்கொடுத்தது
இந்த அற்புத நூல் தான் என் சாதனத்தின் தவத்தின் அடிப்படை ஆகும்
அதனால் தான் வள்ளல் பெருமானும் திருமந்திரம் திருவாசகம் ஓதச் சொன்னார் – ஆனால் நம்மவரோ – இதெல்லாம் சமயமத நூல் என ஒதுக்கி வைத்துவிட்டதால் – அன்னதானம் தான் சன்மார்க்கம் என பரிதாப நிலையில் உள்ளார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.