Wednesday, March 25, 2026

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை திருச்சிற்றம்பலம் 1 உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என் றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே விளக்கம் : இந்த அருட்பாவில் வள்ளல் பெருமான் , திரு ஞான சம்பந்தப்பெருமான் தனக்கு அருளிய சிவ அனுபவம் பத்தி பாடுகிறார் அந்த நித்திய வெளி ஆனது , வெட்டவெளிக்கு மேல் முழுமையாக விளங்கும் ஓர் வெளி எனது வெளியாகவும் வாய்விட்டு உரைக்க முடியா அனுபவம் உடை வெளி ஆகவும் அப்பாலுக்கு அப்பால் விளங்கு வெறுவெளி ஆகிய சிற்சபை எனும் சிற்றம்பலம் என்று எனக்கு உரைத்த உண்மையான குருவே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.