Wednesday, March 25, 2026

ஞானியர் பெருமை

ஞானியர் பெருமை ஞான சரியை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. இதை பாராயணம் செய்கிறார் – நம் மக்கள் ஆனால் யார்க்கும் கண்ணீர் உடல் நனைய வரவிலை ஏன் ?? இது பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இல்லை இது பாவனை செய்ய வேண்டிய நிலை இல்லை நம் சங்க அன்பர்க்ள் இருப்பது ஜீவ நிலையில் – அதனால் ஜீவ காருண்ணியம் ஆற்றுகிறார் அவர் தயவு ஆகிய ஆன்ம நிலைக்கு இன்னமும் ஏறவிலை – அதனால் தயவு ஆற்றவிலை ஆனால் அவர் பெயர் முன்பு தயவு தயவு என வைத்துக்கொள்கிறார் இதெலாம் வெறும் சடங்கு தானே - வேறிலை மக்கள் ஜீவ நிலையில் இருந்து பாடினால் இந்த அனுபவம் வராது ஆன்ம நிலை ஆன்ம அனுபவம் சித்தித்த பிறகு இந்த அனுபவமெலாம் வரும் அப்போது அண்டத்தில் உள்ள எல்லா உயிர் மீது எழும் ஒருமையினால் உயிர் உருகும் – அதனால் உடல் நனையும் அளவுக்கு கண்ணீர் வரும் ஞான சரியை முழுதும் ஆன்ம அனுபவம் எய்தியோர்க்கான பாடல் ஆகும் அதாவது நெற்றிக்கண் திறந்து ஆன்ம தரிசனம் பெற்றவர்க்கான பாடல் ஆம் அவர் தான் பொற் சபைக்கும் சிற்சபைக்கும் உள் நுழைய தகுதி ஆனவர் பொற் சபைக்கும் சிற்சபை = Ph D படிப்புக்கு சம்ம் எனில் ஆன்ம அனுபவம் பெற்றோர் – முது நிலை பட்டதாரி ஆவர் அதனால் அவர் முனைவர் பட்டம் பெற முயல்கிறார் ஆனால் இன் நிலைக்கு ஏறாத மக்கள் – அன்பர்கள் செய்தால் – அறியாமல் செய்தாலும் – அது ஞான சரியை ஆகாது அது சரியாதிகளில் – நன்னாங்கில் 13 எனில் – நம் அன்பர்கள் முதலாவது சரியை கிரியையில் தான் உள்ளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.