Tuesday, March 31, 2026

சிரிப்பு - சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி

சிரிப்பு - சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி கற்பனை தான் பழனி திருவண்ணாமலை சாது குழுக்கள் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் இடம் : பொள்ளாச்சி அடிவாரம் காலை 5 மணி : துயில் நீங்கல் மூலிகைப் பல்பொடி கொண்டு பல் துலப்பது பின்னர் கரிசாலை தூதுவளை பொடி + வென்னீர் கலந்து குடித்தல் மல ஜலம் கழித்தல் 6 – 6.30 மணி : சுவாசப் பயிற்சி ( சிவ வாசி யோகம் ) வாசிப்பவர் சிரிக்கக்கூடாது 6 .30 – 7 மணி : ஆவாரம் பூ தேநீர் காலை உணவுக்கு வேண்டிய காய்கறிகள் நறுக்குவது சாம்பாருக்கு - கத்திரி வடைக்கு மாவு அரைத்தல் மிளகு தூள் அரைத்தல் மாதிரி 7 – 8 : பொங்கல் + வடை சமைத்தல் 8 – 9 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் 9 -10 : காலை சிற்றுண்டி 10 – 11 : அரிசி களைதல் மதிய உணவுக்கு காய்கறி நறுக்குதல் பூண்டு உரித்தல் வெங்காயம் உரித்தல் நறுக்குதல் தக்காளி நறுக்குதல் மாதிரி 11 – 12 : தக்காளி சாதம் தயாரித்தல் 12 – 1 : அன்னமிடல் , சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் 1 – 4 வரை : உண்டு , நூல் ஓதல் – ஓய்வு இத்யாதி இத்யாதி 4 – 4.30 : ஆவாரம் பூ தேநீர் 5.0 – 6.30 – சன்மார்க்க சத்விசாரம் 6.30 - இரவு சிற்றுண்டிக்கு வேண்டிய வேலைகள் செய்தல் 8.00 : சன்மார்க்க அன்பர்க்கு உணவு பரிமாறல் – வண்டியில் வைத்து வேண்டியவர்க்கு அளித்தல் பயிற்சிக்கு வந்த வெளி நபர் : என்னங்க – மூணு வேளை சாப்பாடு தயார் செய்றது தான் சன்மார்க்க வாழ்வியலா ?? இதெலாம் ஒரு பயிற்சியா ?? சாது : இது தான் தயவுடன் கூடிய அதி அற்புதமான சன்மார்க்க வாழ்க்கை முறை இப்படி வாழ்ந்தால் அருள் – ஞான சித்தி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாம் கிட்டும் வெளி நபர் : ஒரே பயனுள்ள பயிற்சி – மூச்சுப்பயிற்சி தான் ஏன் அதை சிவ வாசி யோகம் நு பேர் ?? ஸாது : எல்லாரும் வாசி யோகம் செய்றாங்க – நாம வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் சிவ வாசினு பேர் வச்சிருக்கோம் வெளி நபர் : அப்போ வாசி பார்க்கறது சொல்லித்தர மாட்டீங்களா ?? ஸாது : அது எப்படினு எங்களுக்கே தெரியாதே சாமி எப்படி சொல்லித்தருவது ?? ஜீவகாருண்ணியம் அன்னதானம் தான் பிரதானம் – மத்ததெலாம் உப்புக்கு சப்பாணி மாதிரி ஏன்னா அதை வச்சி தான் வசூல் செஞ்சி எங்க வாழ்க்கை ஓட்றோம் – அதைய நிப்பாட்டியாச்சினா , நாங்க எலாம் நடுத்தெருவுக்கு வந்துருவோம்ல அதான் இந்த மாதிரி வாழ்வியல் பயிற்சி கத்துத்தர்றோம் இந்த மாதிரி மத்த உயிர்க்காக வாழும் போது , உங்க உயிர் உருகி , அருள் கிடைக்கும் வெளி நபர் : சிரித்துக்கொள்கிறார் எப்படி இருக்கு சன்மார்க்கம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.