Monday, March 30, 2026

சம்பு - சம்போ - சிவ சம்போ “

சம்பு - சம்போ - சிவ சம்போ “ இது என் நீண்ட நாள் கேள்வி – சம்பு சம்போ என்றால் என்ன ?? விடை கிடைத்துவிட்டது இந்த சொல் – சிவபெருமானை வாழ்த்துவதாம் - “ சம்போ மகாதேவா “ இதை புரிந்து கொள்ள, சில விளக்கம் தெரியணும் அருட்பா உரை நடை : சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் - 5 பின்னர் எல்லா கோட்பாடு விளக்கம் தனிப்பதிவாக வரும் சம்பு கோட்பாடு: சம்பு என்றால் இன்பத்தை கொடுப்பவன் எனப்பொருள். இக்கோட்பாட்டின்படி இன்பத்தை கொடுக்கின்ற பக்குவ ஆன்மாக்கள் பிறப்பெடுப்பார்கள். ஒரு தபஸ்வி அருளாளர் தனது வாக்கினால் வாழ்த்தியவுடனே , ஆசிர்வதித்தவுடனே அப்பெண்ணுக்கு கருத்தரித்துவிடும். இதன்படி ஆண் பெண் தேகசம்பந்தம் தேவைப்படுவதில்லை மந்திர உச்சாடனம் மூலமும் கருத்தரிக்கும் – கர்ணன் பிறப்பு மாதிரி நம் முன்னோர் இதிகாசம் எவ்வளவு முன்னேறியது தற்போதைய விஞ்ஞானம் காட்டிலும் மேலும் வள்ளலார் தன் உரை நடையில் சம்பு பக்ஷம் பத்தி : சாமானிய ஜீவன் - விசேஷ ஜீவன் என ஜீவன் இரு வகை சிறந்தது சாமானியம் – ஆன்ம அறிவு - ஆன்மா தாழ்ந்தது விசேஷம் – மன அறிவு இவை பூர்வம் உத்தரம் என விளங்கப்பெறுது பூர்வம் என்பது லிங்கஸ்தானம் sex centre உத்தரம் என்பது ஆக்ஞா சிருஷ்டிக்கு காரணம் லிங்கம் ஆதலால் சாமானியம் காரணப்பட விசேஷம் காரியப்படும் விசேஷம் காரியப்படாமல் சிருஷ்டி காரியப்படாது இது சாதாரண பாகம் அசாதாரண பாகம் : சம்பு பஷ சிருஷ்டியில், சாமானியம் கொண்டே விசேஷத்தை வெளிப்படுத்திக்கொளலாம் விசேஷம் அடங்கி இருக்கும் தவம் செய்து செய்து பக்குவத்தில் மேலேற மேலேற ஜீவன் தன் நிலை உயரப்பெற்வான் என்பது உறுதி இந்த அளவுக்கு நாம் பக்குவத்தில் உயர்ந்து விட்டால் , நம் பிறப்பை உடல் அமைப்பை நாமே தீர்மானிக்க முடியும் என்பது கருத்து புராணங்களில் : ரிஷிகள் தம்பதியின் இடத்து “ உங்களுக்கு அறிவாளியான குறைந்த ஆயுளுடன் பிள்ளை வேணுமா ?? இல்லை முட்டாள் அசட்டு பிள்ளை நீண்ட ஆயுளுடன் பிள்ளை வேணுமா என கேட்டு வரம் அளிப்பர் ஆன்மா துணை கொண்டு ஜீவன் தன் பிறப்பை முடிவு செய்து கொள்ளலாம் ஆர் தவத்தில் தன் கண்ணை மேல் பார்வை ஆக வைத்திருக்காரோ கேசரி மாதிரியாக ?? அந்த கண் – சம்புவின் கண் என அழைக்கப்பெறும் ?? Eye of the Shamboo வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.