Wednesday, March 25, 2026

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை “

சிற்சபை - சிற்றம்பலம் பெருமை “ அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம் ” எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்பதரிதாய் தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தை ” தந்து எனைத் தன்மயமாக்கி பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என்னுளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்சோதி என்னரசே உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என் றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே விளக்கம் : இது அது என பிரிக்க முடியாததாய் எல்லாம் ஒன்றாய் வாய் விட்டு உரைக்க முடியாததாக அளிக்கும் அனுபவம் சிற்சபை அனுபவம் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.