Tuesday, March 24, 2026

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும்

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும் சைவ சித்தாந்தத்தின் தச காரியம் முழுமையாக அனுபவத்துக்கு வந்தக்கால் சாகாக்கல்வி பூரணம் அடைந்ததாக பொருள் ஆம் அருட்பா - உரை நடைப் பகுதி தச காரியம் - விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் - இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம சுத்தி இது ஆன்ம அனுபவம் - சுழிமுனை திறந்த பிறகு ஏற்படும் அனுபவம் - மௌன நிலை - தன்னை உணர்ந்த நிலை ஆன்மா மீது சத்தினிபாதம் என்னும் அருள் பதிந்த போது ஆன்மாவின் ஆணவம் கெட்டு , சுத்தி அடையும் இது ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆவது இது பர வெளி அனுபவம் 7 சிவ ரூபம் 8 சிவ தரிசனம் 9 சிவ யோகம் 10 சிவ போகம் இவைகள் யாவும் சிவ அனுபவம் - ஆன்மா அனுபவிக்கும் இன்பங்கள் - போகங்கள் ஆகும் - ஆன்ம நிலைக்கு மேல் இவைகள் பரம்பர பராபர வெளி அனுபவம் சாகாக்கல்வி அறியும் / அனுபவிக்கும் வெளிகள் மரணமிலாப்பெருவாழ்வு சித்தி ஆவது இங்கே ஆக ஜீவன் ஆன்மாவுக்கு மேலேறி ஜீவான்மாவாக வாதம் ஆகணும் அதன் பின் ஆன்மா சிவத்துக்கு தகுதி பெற்று சாகாக்கல்வி அடைதல் ஆக தசகாரியத்தில் சாகாக்கல்வி அடக்கம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.